Visitors 1523714

Feedback
Feedback

Stores 513

Kovilpatti - S. Shafeeq Ahmed - National Level Achiever in Karate

Total Views 27

This Week 5

Today 1

">Statistics
Visits : 1 / 27
 

 

மதுரை பள்ளி மாணவன் - தேசிய அளவிலான கராத்தே சாதனை.

  • உலகளவில் பழங்காலந்தொட்டே அதிகரித்து வரும் தற்காப்பு கலைகளுள் ஒன்று கராத்தே கலை. இந்தியாவில், இக்கலையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கராத்தே கலையை கற்பது, தனக்கு ஆபத்து ஏற்படும் நேரங்களில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உறுதுணை புரியும் ஒரு சிறந்த கலை. இக்கலை தற்காப்பு மட்டுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு உன்னத கலையும் ஆகும்.
  • அத்தகைய அற்புதமான கராத்தே கலையை மதுரை வேலம்மாள் வித்யாலயாவில் "ஏழாம் வகுப்பு பயிலும் ஷபிக் அகமது" என்ற மாணவன் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து, கராத்தே கலையில் தனது பள்ளியில் சிறந்த எட்டு மாணவர்களில் ஒருவனாக திகழ்கிறான். மாணவனின் கலை திறமையை முதலில் பாராட்டி இவரது பள்ளி நிர்வாகம் (பள்ளி முதல்வர், துணை முதல்வர்) பல பரிசுகளை வழங்கியுள்ளது.
  • பின்னர், தொடர்ந்து தன்னுடைய விடாமுயற்சியால், இந்திய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன் சிப் போட்டியில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், மாணவன் ஷபிக் அகமது - தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் டெல்லி இதுபோன்ற மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.
  • இவரின் இந்த திறமை மாநில அளவில் நின்று விடாமல், உலக அளவில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் மாணவன் வெற்றி பெற இடவுண் இந்தியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
  • "மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல், கலைத் திறமையை வளர்த்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்" என்பதற்குகிணங்க, இவனை போன்ற மற்ற மாணவர்களுக்கும் எடுத்துகாட்டாக திகழ்கிறான்.